கோவையில் தொடர் கஞ்சா விற்பனை – இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..!

பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. எச்சரிக்கையை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இந்த இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிராஜன், மற்றும் முருகசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இதே போல் எச்சரிக்கையை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...