ஆடிப்பெருக்கையொட்டி கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை பேரூர் நொய்யல் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நொய்யல் கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நொய்யல் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.



ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்களும் பொதுமக்களும் நொய்யல் ஆற்றில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை நொய்யல் ஆற்றில் விட்டு புனித நீராடி வழிபடுவார்கள். பெண்கள் அனைவரும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள்.



கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும், நொய்யல் தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வார்கள். இதன் அடிப்படையில் இன்று காலையிலிருந்து கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பேரூர் வந்தனர். இவர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடி பேரூர் பட்டீஸ்வரர் சாமியை வழிபட்டு சென்றனர்.













Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...