தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு முன்னாள்‌ மாணவர்கள்‌ ரூ.5 லட்சம் வழங்கினர்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் விழாவில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அ‌றக்கட்டளை நிறுவ ரூ.5 லட்சத்தை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ 1978-81 ம்‌ ஆண்டு, வேளாண்மை மற்றும்‌ தோட்டக்கலை பட்டப்‌ படிப்பு முடித்து, 30.07.21 அன்று பட்டம்‌ பெற்று 41 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்த மாணவர்கள்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பாரம்பரியமிக்க' ஃபிரிமேன்‌' கூடத்தில்‌ ஒன்று கூடி விழாவாக கொண்டாடினர்‌.

இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர் முனைவர்‌ இவ. கீதாலட்சுமி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார், அவர் பழைய மாணவர்கள்‌ தங்கள்‌ கல்லூரிக்கால 'டேட்லர்‌' என்ற பத்திரிக்கையை தற்காலத்திற்கு தகுந்தவாறு மறு உருவாக்கம்‌ செய்தனர்‌.

இந்த டேட்‌லர்‌ ஒவ்டவொரு பழைய மாணவரின்‌ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது.

இந்த 'டேட்லர்‌-2.0'வை வெளியிட்டார்‌. மாணவர்களின் இந்த முயறசியை துணைவேந்தர்‌ பெரிதும்‌ பாராட்டி பேசுகையில் பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்று வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, அதில்‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ பங்கு பற்றியும்‌ விரிவாக எடுத்து கூறினார், மேலும் பல்கலைக்கழகம் மற்றும்‌ விவசாயிகளின்‌ முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள்‌ பற்றியும்‌ எடுத்துரைத்தார்கள்‌.

விழாவில் இந்த முன்னாள் மாணவர்கள்‌ தங்களுக்குள்‌ திரட்டிய ரூபாய்‌ 5 லட்சத்தை பல்கலைகழகத்தில்‌ 'அறக்கட்டளை நிறுவுவதற்கு நிதியாக' துணைவேந்தரிடம்‌ அளித்தனர்‌.

இந்த நிதியிலிருந்து வரும்‌ வட்டித்தொகையைக்‌ கொண்டு, இனிவரும் காலங்களில் ஏழை மாணவர்களின்‌ கல்விக்கு 'உதவித்‌ தொகை' வழங்குவதற்காக இந்த நிதியை தருவதாக அவர்கள் கூறினார்கள்‌.



இந்த விழாவில்‌ 54 முன்னாள்‌ மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌. இந்தியா மட்டுமல்லாமல்‌ அமெரிக்கா மற்றும்‌ நியூசிலாந்து நாட்டிலிருந்தும்‌ வந்து

பங்கேற்றனர்‌. இவர்கள்‌ தாங்கள்‌ படித்த கல்லூரியில்‌ மறுபடியும்‌ ஒருமுறை தங்கள்‌ பழைய வாழ்க்கையை வாழ்ந்தும்‌, மற்றும்‌ நினைவு கூர்ந்தும்‌ மகிழ்ந்தனர்‌. தாங்கள்‌ படித்த கல்லூரிக்கு மீண்டும்‌ ஒரு முறை நன்றி கூறி பழைய நினைவுகளோடு விடை பெற்றுச்‌ சென்றனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...