கோவையில் ஆயுத படை காவலர் தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி

கோவை, கரும்புக்கடை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் போத்தனூர் போலீஸில் ஷாருக்கான் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் இருந்த ஷாருக்கான் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...