மத்திய அரசின் 'ஜன் சேவா புரஸ்கர விருது' பெற்று தருவதாக கூறி ரூ.14.85 லட்சம் நூதன மோசடி - கோவையை சேர்ந்தவர் கைது

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து “ஜன் சேவா புரஸ்கர விருது” வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்த கோவை இக்னீசியஸ் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் சலீம் ராஜா (61) வழக்கறிஞர், இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனக்கு கடந்த 2021-ம் ஆண்டு இணையதளம் மூலமாக கோவை புதூரை சேர்ந்த இக்னீசியஸ் பிரபு (40) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் என்னிடம் மத்திய அரசில் தனக்கு தெரிந்தவர்கள் உள்ளதாக கூறினார். மேலும் மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஜன் சேவா புரஸ்கர விருது ஜனாதிபதி, மற்றும் பிரதமரிடம் பெற்று தருவதாக கூறினார். அதற்கு பணம் மட்டும் செலவாகும் என கூறினார்.

இதனை உண்மை என நம்பிய நான் மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று, இக்னீசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி விருது பெற்று கொடுக்கவில்லை. என்னிடம் பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இக்னீசியஸ் பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து விருது வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த இக்னீசியஸ் பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...