கோவை மலுமிச்சம்பட்டியில் பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சாலையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரரை போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து வலை வீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் லதா மாலை தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல மலுமிச்சம்பட்டி பிரதான சாலையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பேச வருவது போல அருகே வந்து திடிரென லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டார்.

இதையடுத்து லதா செட்டிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...