கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..!

தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. மழை காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானது.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அருவியை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் முதல் கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கவர்கள், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...