மருத்துவர் இல்லை, ஆனால் பதிவேட்டில் கையெழுத்து...! கோவையில் மூத்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்..! - அமைச்சர் நடவடிக்கை

முறையாக பணிக்கு வராமல் இருந்த மருத்துவர் முனுசாமி, வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அவரை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் கடந்த ஞாயிறு அன்று (31-07-2022) அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவராக டாக்டர் முனுசாமி செயல்பட்டு வந்தார். இவர், வருகை பதிவேட்டில் முறைகேடு செய்ததாக வந்த புகாரையடுத்து, விசாரணை மேற்கொண்டு மருத்துவர் முனுசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதயவியல் துறை தலைவர் டாக்டர் முனுசாமி சேலத்தில் வசித்து வருகிறார் இவர் சில நாட்கள் மட்டுமே கோவை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வருகை பதிவேட்டில் பல நாட்கள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்ததில், அவர் முறையாக பணிக்கு வராமல் இருந்ததும், வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அரசு மருத்துவர் முனுசாமி யை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

நோய்களை தீர்க்க ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை அரசு மருத்துவமனைகள் தான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பாற்றக்குறையால், மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், பதிவேட்டில் முறைகேடு செய்து, மருத்துவமனைக்கே வராமல் வந்ததாக கணக்கு காட்டி வந்த அரசு மருத்துவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...