தஞ்சையில் மாயமான 14 வயது சிறுமி - கோவை ரயில் நிலையத்தில் மீட்பு…!

காணாமல் போன சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை அறிந்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, இன்று அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார்.



கோவை: தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, கோவை இரயில் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட சிறுமி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிறுமி தன்னிடம் செல்ஃபோன் வைத்திருந்ததால் அவரது மொபைல் நெட்வொர்க்கை போலீசார் ட்ராக் செய்து வந்துள்ளனர்.

அப்போது, சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்ட தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, உடனடியாக அதிகாலையில் கோவை ரயில் நிலையம் விரைந்த கோவை போலீசார், கோவை இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து தஞ்சாவூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்றும் தஞ்சாவூர் போலீசார் வந்தவுடன் முறையாக அனுமதி பெற்று, சிறுமி ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...