ஏன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது? ஆய்வின் போது கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநாகராட்சி ஆணையாளர்..!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், கடை உரிமையாளர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் கேடுகளை குறித்து எடுத்துரைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையாளர், அரசு விதிமுறை நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த கூடாது? அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை குறித்து விளக்கினார்.

மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...