மதுக்கடை வேண்டாம்'-திருப்பூரில் அமைய உள்ள மதுக்கடைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்: கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்..!

மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்ட நிலையில், கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து, 42-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 43-வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட கே வி ஆர் நகரில் 1257 என்ற டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபானக் கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.



எனவே, இந்த மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து இன்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அண்பகம் திருப்பதி மற்றும் 43-வது வார்டு மதிமுக கவுன்சிலர் சாந்தாமணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அவர்கள் கே.வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மறியலில் இருந்து களைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போரட்ட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...