ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும்- கோவை பொள்ளாச்சியில் விசுவ இந்து பரிசத் தீர்மானம்..!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற விசுவ இந்து பரிசத் தென் தமிழக செயல்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: விசுவ இந்து பரிசத் அமைப்பின் தென் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும், இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களிலிருந்து வரும் வருமானத்தை கோயில் மேம்பாட்டுக்காகவும், இந்து கலாச்சார பாதுகாப்பிற்காகவும் செலவிட வேண்டும், இந்து கோயில்களின் சொத்துக்களை விற்க முனைப்பதையும் அரசு கைவிட வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கோசாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசுவ இந்து பரிசத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல ஆண்டுகள் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சொத்துக்கள் சிக்கி உள்ளது. இதை மீட்டெடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...