கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் குடியிருப்பு பகுதியில் ஆணையாளர் பிரதாப் திடீர் ஆய்வு..!

சேரன் காலனி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொடுக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறார்களா? என கேட்டறிந்ததுடன், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதை தொடர்ந்து, அதே பகுதியில் புதிதாக அமைய உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெற்று விரைவில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, சேரன் காலனி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொடுக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறார்களா? என கேட்டறிந்ததுடன், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், குடியிருப்பு மக்களிடமும் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...