80-வீடுகளில் 50-வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30-வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும் இதனால், டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.
கோவை: குடிசை மாற்று வாரியத்தில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பிறகும் வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க நிராகரிப்பதாக கூறி பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை காந்தி பார்க் பகுதியில் எட்டு மாடி கட்டிடத்தில் 100-புதிய வீடுகள் தயாராகி வருகிறது. இதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், 80-வீடுகளில் 50 வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30 வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் விவேக் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.