கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்த பெண்..!

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயித்த நபர் ஏமாற்றியதால் விபரீத முடிவு எடுத்த துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அழைத்து அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்தார்.

அப்போது,ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் சோதனை பணியிலிருந்த காவல் துறையினர் சந்தேகித்து பெண்ணின் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.



இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த பந்தய சாலை போலீசார்பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். திருமணம் செய்வதாக நிச்சயத்து விட்டு செந்தில்குமார் என்பவர் தற்போது திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அதிருப்தியில் தற்கொலை முயற்சி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் பணியிலிருந்த காவல் துறையினர் பெண்ணிற்கு அறிவுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...