கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4-பேர் கைது..!

கோவை தடாகம் கணுவாய் பாரதி கார்டன் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4-பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தடாகம் கணுவாய் பாரதி கார்டன் முதல் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35). தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 31). சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாக தெரிகிறது.

அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய முத்துக்குமார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பிரியா தடாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வந்தனர்.

அப்போது வடவள்ளியை சேர்ந்த நண்பர்கள் டிரைவர் விக்னேஷ் (20), எலக்ட்ரீசியன் நிரஜ்சன் (22), ஆட்டோ டிரைவர் கண்ணன் (23), மற்றும் மாதேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நண்பர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...