எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் 26-வது பட்டமளிப்பு விழா

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கேட்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வி.இராஜகோபாலன் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். 

இதைத்தொடர்ந்து வி.இராஜகோபாலன் சிறப்புரையாற்றுகையில், "12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய பட்டமளிப்புவிழா இன்றளவிலும் நம்நாட்டு முறைக்கேற்ப கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய மூன்று பேர்களின் பங்கு மிகமுக்கியமானதாகும். இம்மூவரின் பங்கும் எஸ்.என்.ஆர். நிறுவனத்தில்தான் முழுமையாகவும் நிறைவாகவும் உள்ளது. 

பெற்றோர்கள்- குழந்தைகள், ஆசிரியர்கள்- மாணவர்கள் ஆகிய இரண்டு உறவுமுறைகளும் ஒரு சமூகத்தில் மிக முக்கியமாக பேணப்பட வேண்டியவைகளாகும்.  

முன்பிருந்த பற்றாக்குறையுகம், செலவிடும் யுகமாக மாறி, பின் வளமான யுகமாக வளர்ந்து, தற்போது பெரும்வளமான சூழலில் பயணிக்கிறது. இது கால ஓட்டத்தில் மனிதகுலம் அடைந்த பெருவெற்றி என்றே கருதலாம்" என்று கூறிய அவர்  இறுதியாக, "கல்வி என்பது தொடர்பயிற்சியாக இருக்கும்பட்சத்தில் கற்றல் என்பது மாணவனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றது. எனவே, மாணவர்கள் கற்றலை ஒரு தொடர் பயிற்சியாகவே பின்பற்றவேண்டும்” என்று அறிவுறுத்தினார். 

எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.விஜயகுமார், கல்விப்புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் 421 இளநிலை பட்டதாரிகளும் 132 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்கள் பெற்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...