கோவையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

கடந்த ஆண்டு எல்லாம் கொரோனா பெருந் தொற்றால் ஆயிரக்கணக்கான படுக்கைகள் கொடிசியாவில் அமைக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இங்கு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2002 கடந்த பத்து நாட்களாக கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.



இதன் நிறைவு விழாவான இன்று, சுகாதாரத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர்.



விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என தெரிவித்தார். கோவை மாவட்டம் எழுத்தாளர்களை அதிகம் கொண்டது எனவும் கொங்கு தமிழும் மரியாதையை கொண்ட தமிழும் இங்கு அதிகம் உண்டு எனவும் கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதிக்கு அடைக்கலம் கொடுத்த மண் இந்த கோவை மண் என கூறிய அவர் இங்கு உள்ள சிங்காநல்லூரில் கலைஞர் இருந்துள்ளார் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தான் அணிந்திருந்த வெற்றி கழன்று விடுமோ என்று அய்யப்பட்டதாக கூறிய அவர் எங்கள் ஆட்சியில் வேட்டியை கழட்டுவதற்கு யாரும் இல்லை எங்கள் ஆட்சியில் அது நடக்காது என கூறினார். மேலும் புத்தக கண்காட்சி மாநிலம் முழுவதும் நடத்துவதற்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது என தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் கொடிசியா வளாகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஏராளமான மக்கள் கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டு மரண ஓலங்கள் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு எல்லாம் கொரோனா பெருந் தொற்றால் ஆயிரக்கணக்கான படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் இருந்தது.



ஆனால் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இங்கு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக புத்தகம் எழுத எழுத்தாளர்கள் யாரும் முன் வரவில்லை என கூரிய அவர் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்ய செலவாகும் என்பதால் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தாங்களே வைத்துக் கொண்டு இருந்தனர், இதனை மாற்றும் பொருட்டு தமிழக முதல்வர் தன்னை காண வருபவர்கள் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார், அதன்படி அனைவரும் முதல்வருக்கு புத்தகத்தை கொடுத்தனர், அந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் ஏற்கனவே தமிழில் வெளியாகி உள்ளது அடுத்த வாரம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த இரு நூல்களும் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் வேஷ்டி அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...