கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சாக்லேட் புழக்கம் - 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல், 15 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு...!

சமீபத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்லேட் வடிவில், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமானது. இந்த நிலையில், இரத்தினபுரி பகுதியில், கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரின் "ஆபரேசன் 2.0" என்ற பேரில் தடைசெய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க தனிப்படை அமைப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்லேட் வடிவில், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமானது. இந்த நிலையில், இரத்தினபுரி பகுதியில், கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல்

கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரத்தினபுரி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சங்கனூர் சாலை கண்ணப்ப நகர் பகுதியில், முதியவர் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டு இருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அருகே சென்று விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் வலுக்கவே, போலீசார் அவரது இரு சக்கர வாகனம் மற்றும் அதில் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர்.



அப்போது, அந்த சாக்கு மூட்டையில் 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அவரிடம் விசாரித்தபோது எந்த பதிலும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் கோவை அறிவொளி நகரை சேர்ந்த பாலாஜி (56) என்பதும், அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் மார்க்கெட்டில் வேலை பார்த்து கொண்டே, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கும்பல்

பாலாஜிக்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொடுத்தது, கஞ்சா கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த ஸ்டைல் சுரேஷ் என்பவர் என்பதும் அம்பலமாகியுள்ளது. அந்த கும்பலில் மொத்தம் 15 பேர், ஸ்டைல் சுரேஷுக்கு கீழ் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. ஸ்டைல் சுரேஷ் கொடுக்கும் கஞ்சாவை வெவ்வேறு பகுதிகளில் விற்று அவரிடம் பணத்தை கொடுத்து வருவது தான் இவர்கள் வேலை. குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.

விசாரணையின் முடிவில், பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொபட் மற்றும் 20.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், பாலாஜி கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அவருடன் தொடர்புடைய கஞ்சா கும்பல் தலைவன் ஸ்டைல் சுரேஷ், கவுதம், நந்தா, மோசஸ், கருப்பு கவுதம், விக்கி வேதா, சந்தோஷ், தீபக் சமிலா, சிக்கோல் சந்தோஷ், கவாஸ்கான் உள்பட 15 பேரை பிடிக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, போலீசார் தங்களை தேடுவதை அறிந்த ஸ்டைல் சுரேஷ் உள்பட 15 கொண்ட கும்பல் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...