தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் - வால்பாறை தி.மு.க. புதிய நகர செயலாளர்

புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகர திமுகவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கவுன்சிலர் சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வால்பாறை சிங்கோனா 21 வது வார்டு, முன்னாள் கவுன்சிலர், சுதாகர் செயலாளராகவும், சி செல்லமுத்து - அவைத்தலைவர், எஸ் சரவணன் பொன்பாண்டி - ஆதிதிராவிடர் துணைச் செயலாளர், மகளிர் துணைச் செயலாளராக, சூரிய பிரபா என பல்வேறு புதிய நிர்வாகிகளை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



முன்னதாக, வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.



அதன் பின் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்று புதிய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.



நிகழ்ச்சியில், முன்னாள் நகர கழக செயலாளர் கோழிக்கடை என்.கணேசன், நகர்மன்ற துணை தலைவர் செந்தில் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் - மகுடீஸ்வரன், பாஸ்கர், அன்பரசன், காமாட்சி கணேசன், உமா மகேஸ்வரி, இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...