கோவையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வுக் கூட்டம்: உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இன்று நடைபெற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தான ஆய்வுக்கூட்டத்திற்கு, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி தலைமை வகித்தனர்.



கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தான ஆய்வுக்கூட்டம் இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தனர்.



தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் அவரவர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மேற்கொண்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள், காத்திருப்போர் பட்டியல் அதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசினர்.



மேலும், மருத்துவமனை மேம்பாட்டிற்காக தேவைப்படும் வசதிகள், நவீன கருவிகள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.



சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு:



2008 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. அப்போது தான் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவிற்கு வழிகாட்டி அமைப்பாக இருந்தது.

உறுப்பு கொடை மற்றும் பயனாளிகள்

அன்று முதல் இன்று வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட கொடையாளர்கள் 1524 பேர். இதில் மொத்த உறுப்புகளின் பயன்பாடு 5557 ஆகும். அதில், இருதயம் மாற்று சிகிச்சைக்காக 711, நுரையீரல் 676, கல்லீரல் 1404, கணையம் 33, சிறுகுடல் 5, வயிறு 1, கைகள் 4, இப்படி 1524 மூளை சாவு அடைந்த கொடையாளர்களிடமிருந்து உறுப்புகள் கிடைக்கப்பெற்று, பிறர் பயன் பெற்றுள்ளனர்.

உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை..!

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியா முழுவதும் உறுப்பு கொடை பணி தொய்வடைந்து இருந்தாலும், தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும், கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என்று திட்டத்தை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், இன்றைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், ஜூலை 2022 வரை உறுப்புக் கொடையாளர்கள் 114 பேராக உள்ளனர். அதில், 479 உறுப்புகள் பெறப்பெற்று, 588 பேர் பயன்பெற்றுள்ளனர்.

தமிழகம் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருந்தாலும், தேவைகள் அதிக அளவில் உள்ளது. அதன்படி, சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் 6483, ஈரலுக்காக 380 பேர், இதயம் 43 பேர், நுரையீரல் 42 பேர், கணையம் 2பேர், கைகள் வேண்டி 23 பேர் காத்திருந்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும், ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து ஆறு பேர் பலனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை அவயங்கள் (செயற்கை கை கால்கள்) தமிழ்நாடு முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு அமைக்கும் பணியும் தொடர்ந்து வருகிறது.

அதேபோல, கடந்த 14 மாதத்தில் மட்டும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், 588 பேர் பயன்பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவத்தில் 82 லட்சத்து 43 ஆயிரத்து 875 பேர் பயனடைந்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் மேம்பாடுப் பணிகள்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்கள் வாங்க ரூபாய் 36 கோடியே 60 லட்சம் நிதி, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையத்திற்கு ரூபாய் 34.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் மரபியல் மருத்துவத்திற்கு ரூபாய் 2 கோடியே 73 லட்சத்தில் மூன்று ஒப்புரவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரூபாய் 13 லட்சம் செலவில் "டயாலிசிஸ்" இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கீடு மற்றும் ரூபாய் 53 லட்சம் செலவில் புதிய அவசர சிகிச்சை மீட்பு மையம் அமைய உள்ளது.

இதனுடன், கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை நோய் 80 நாடுகள் பரவியுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், தமிழகத்திற்கு பாதிப்பு வராது என உறுதியாக சொல்ல முடியாது. இந்நிலையில், திருச்சி மற்றும் நாகர்கோவிலில் குரங்கு அம்மை தொற்று வதந்தி பரவியது. பாதிக்கப்பட்ட நபர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு நெகடிவ் என ஆய்வு அறிக்கையில் வந்துள்ளது. அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை, வேறு பிரச்சனை. 

அப்படியே, பாதிப்புகள் இருந்தாலும், மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. குரங்கமை பரிசோதனை செய்ய நம்மிடமே ஆய்வுக் கூடங்கள் என தேவையான வசதிகள் உள்ளது. 

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை மூன்றரை கோடி பேருக்கு போடும் நிலை உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது. இதுவரை, பூஸ்டர் தடுப்பூசி 37 லட்சத்து 33 ஆயிரத்து 957 பேர் செலுத்தி உள்ளனர். அதாவது, 9.63% பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதே போல, இரண்டாம் தவணை 88.62% பேர் செலுத்தியுள்ளனர். 

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக, 33 வது மெகா தடுப்பூசி முகாம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை..! 

தமிழகத்தில் தான் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இத்துறையில் உள்ள 4308 காலி பணியிடங்களை நிரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...