கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் நின்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!

கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (52), என்பவர் தனது மாருதி காரில் இன்று மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவு புகை கிளம்பி, தீ பிடித்துள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் தீ பிடிக்க துவங்கியதால் பரபரப்பு நிலவியது.



கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (52). இவர், இன்று மாலை தனது மாருதி காரில், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள், அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதரன் உடனடியாக வெளியே வந்தார்.

தொடர்ந்து, காரின் முன் பகுதியில் தீ பிடிக்க துவங்கியதால், உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால், தீ வேகமாக பரவத் துவங்கிய நிலையில், அங்கு சிறப்பு நிலை அலுவலர், ராமகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தனசேகரன், பிரசாத் உள்ளிட்டோர் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



காரில் புகை வந்தவுடன் காரை விட்டு தாமோதரன் உடனடியாக இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...