கோவையில் திடீரென பெய்த மழை: தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி..!

பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதால், மழை தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேர மழைக்கே அல்லல் பட வேண்டிய சூழல் என்பது கோவையில் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு என்று தான் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


கோவை: கோவையில் திடீரென பெய்த கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம், உக்கடம், ரத்தனபுரி, சிவானந்தா காலனி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், உக்கடம், ஆத்துபாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென சுமார் ஒரு மணி நேரம் தொடர் கனமழை பெய்தது.



மதிய நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



குறிப்பாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர்சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களை கொண்டு சுரங்கப் பாதையில் உள்ள நீரை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசலால், போக்குவரத்து காவலர் ஒருவர் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் செல்ல வழிவகை செய்தார்.



தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் பேரிக்கார்டுகள் அமைத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு மணி நேர மழைக்கே அல்லல் பட வேண்டிய சூழல் என்பது கோவையில் தொடர்கதையாகி வருகிறது இதற்கு என்று தான் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவார்கள் என்றுவாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...