ஏற்றம்.. ஏற்றம்.. என கூறி ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது திமுக அரசு: திருப்பூரில் ஜி.கே.வாசன் காட்டம்..!

ஏற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு ஏமாற்றங்களை மட்டுமே மக்களுக்குத் தருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்தார்.


திருப்பூர்: ஏற்றம் தருவதாக கூறி ஏமாற்றங்களை மட்டுமே மக்களுக்கு திமுக அரசுதருகிறது என ஜி.கே.வாசன் விமர்சித்தார்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மாதாந்திர மின் கட்டண உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.



மேலும், மக்கள் மட்டும் அல்லாமல் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார். பெண்கள் இரவில் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களில் கூட நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் எந்த நல்ல திட்டத்தையும் அமல்படுத்தாமல் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற அறிவிக்கப்படாத திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடுமையான சிரமத்தைக் கொடுப்பதாக விமர்சித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...