கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை..!

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்புக்கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.


கோவை: கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் துளசி பறிக்க சென்றதாக தெரிகிறது.

அப்போது வனப்பகுதியில் மனித எலும்புகள் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து,கிராம நிர்வாக அலுவலர் பாலசந்திரனுடன் மதுக்கரை போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது உறுதியானது. இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...