போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பாமக கட்சியினர் கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக கட்சியினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிப்பதற்குத் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இதில், கண்டன மது போதைப் பொருட்கள் வேண்டாம் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மாவட்டச் செயலாளர் ராஜ், கஞ்சா குட்கா சிகரெட் போன்ற பொருட்கள் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களைக் குறி வைத்து விற்கப்படுவதாகவும், இதனை தடுப்பதற்கு தமிழக அரசின் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.



Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...