கோவை பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்? - வரும் 5-ம் தேதி விசாரணை..!

நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை:பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக, வரும் 5-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 820 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார் (45), விவேக் (35), நித்யானந்தம் (30), மேலாளர் சத்யலட்சுமி (30), மற்றும் 43-ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றனர். இடைக்காலத் தடை தேதி முடிந்து, மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...