கோவை மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய, 5 நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை..!

தடையை மீறி போஸ்டர்களை ஒட்டிய, தி கோவை ஹெரால்டு, தி கோவை மெயில், ஷைன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, புரபென்னா டெக்னாலஜீஸ், ரெட் டாக்சி ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சீரழிப்பு தடுப்புச்சட்டப் படி, வழக்கு பதியப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில், விளம்பரங்கள் எழுதுவது மற்றும் சுவரொட்டிகள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்திருந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.

உத்தரவை மீறி சுவரோட்டிகள் ஒட்டும் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக சுவரொட்டி வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தடையை மீறி பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிய நிறுவனங்கள் குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயலஷ்மி அளித்த புகார்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதன்படி, தி கோவை ஹெரால்டு, தி கோவை மெயில், ஷைன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, புரபென்னா டெக்னாலஜீஸ், ரெட் டாக்சி ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சீரழிப்பு தடுப்புச்சட்டப் படி, வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால தூண்களில் பெரும்பாலும் திமுக கட்சியின் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளது. குறிப்பாக, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சார்பில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான போஸ்டர்களை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒட்டியுள்ளனர். அதே போல, பிற அரசியல் கட்சியினரும் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.

எனவே, தடையை மீறி போஸ்டர்கள் ஒட்டிய தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போல, அரசியல் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...