கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு..!

மாநகராட்சி மற்றும்‌ நகர்ப்புற பல்லுயிர்‌ பாதுகாப்பு மையம்‌ (CUBE) இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ தொடங்கி வைத்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ நகர்ப்புற பல்லுயிர்‌ பாதுகாப்பு மையம்‌ (CUBE) இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தொடங்கி வைத்தார்‌.

மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, செய்தியாளர்களிடம்‌ தெரிவித்ததாவது, இப்பயிற்சியானது இயற்கையான இடங்களில்‌ ஒவ்வொரு வாரமும்‌ இரண்டு நாட்கள்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளியின்‌ 30 முதல்‌ 35 மாணவ, மாணவிகள்‌, 2 ஆசிரியர்கள்‌ கொண்ட குழுவாக ஒரு கிலோமீட்டர்‌ தூரம்‌ நடந்து செல்லும்‌ வழியில்‌ தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. மேலும்‌, இயற்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி கால அட்டவணைப்படி நடத்தப்பட உள்ளது.

சிங்காநல்லூர்‌ குளத்திற்குப் பல நாடுகளிலிருந்து பலவகையான பறவைகள்‌ வந்து செல்கின்றன. பலவகையான வண்ணத்துப்பூச்சிகளும்‌ உள்ளது. இயற்கை சூழல்‌ நிறைந்த சிங்காநல்லூர்‌ குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்‌. மேலும்,‌ கழிவுநீர்‌ குளத்திற்குள்‌ வராமல்‌ தடுக்க இயற்கையான முறையில்‌ வேளாண்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம்‌ தயாரித்து அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மேலும்‌ ஆகாயத்தாமரைகளை அகற்ற புதிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌, மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும்‌ சிங்காநல்லூர்‌ குளத்தைப் பார்வையிட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்‌ சிங்காநல்லூர்‌ குளத்திற்கு வரும்‌ ராஜவாய்க்கால்வாய்‌ மற்றும்‌ பெரிய குளம்‌, வாலாங்குளம்‌ வழியாக வரும்‌ கால்வாயும்‌ உடனடியாக தூர்வாரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்தார்‌.



இந்நிகழ்வின்போது மாவட்ட வன அலுவலர்‌ டி.கே.அசோக்குமார்‌, உதவி ஆணையர்‌ முத்து இராமலிங்கம்‌, சுகாதார அலுவலர்‌ முருகா, மதுக்கரை வன சரகர் ப.சந்தியா, மதுக்கரை வனவர்‌ ஐயப்பன்‌, மசக்காளிபாளையம்‌ மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.‌

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...