கோவையில் தனியார் காட்டன் மில் நிர்வாக இயக்குநர் வீட்டில் 67 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, பணம் திருட்டு பரபரப்பு

கோவையில் தனியார் காட்டன் மில் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருடியவர்களை கண்டுபிடிக்க போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்த ஹரிஷ் பாபு (34).

இவர் அவினாசியில் இயங்கி வரும் தனியார் காட்டன் மில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மனைவி தற்போது சென்னையிலும், தாய், தந்தை இருவரும் கம்பனி கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஹரிஷ்பாபு தனது நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியாற்றும் இளங்கோ என்பவரை வீடு பூட்டியுள்ளதா என்பதை பார்க்க அனுப்பி உள்ளார்.

அப்போது இளங்கோ வந்து பார்த்த போது ஹரிஸ்பாபுவின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளங்கோ ஹரிஷ் பாபுவிற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஹரிஸ் பாபு வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தப்பிய மர்ம கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...