கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு..!

சுமார் 48-வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எதற்காக வந்தார்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது.



இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து சுமார் 48-வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எதற்காக வந்தார்? கொலையா? தற்கொலையா? என பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...