கோவை சுகுணாபுரம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது: பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி பேட்டி..!

பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.



கோவை: கோவை அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.



கோவை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது குற்றம்சாட்டி 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...