இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோவை: போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் உள்ள கொடி கம்பம் விளம்பர போஸ்டர்களை 10-நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் உள்ள கொடி கம்பம் விளம்பர போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும், 10 நாட்களில் அகற்றப்படாத விளம்பர போஸ்டர் விளம்பர பதாகைகள் கொடிக்கம்பங்களை மாநகராட்சி சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.