போஸ்டர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை 10-நாட்களுக்குள் அகற்ற கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!

இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.



கோவை: போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் உள்ள கொடி கம்பம் விளம்பர போஸ்டர்களை 10-நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் உள்ள கொடி கம்பம் விளம்பர போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும், 10 நாட்களில் அகற்றப்படாத விளம்பர போஸ்டர் விளம்பர பதாகைகள் கொடிக்கம்பங்களை மாநகராட்சி சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிக்கம்பங்கள் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...