கோவையில் வழக்குரைஞர்கள் சங்கம் (பார் அசோசியேஷன்) அலுவலகத்தில் புகுந்து வழக்குரைஞர்களை தாக்கியவர் கைது..!

இதுகுறித்து, வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களை தாக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் அலுவலகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய நபரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குச் சென்ற கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53). என்பவர் திடீரென வழக்குரைஞர்கள் குறித்து அவதூறாகப் பேசி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அலுவலகத்திலிருந்து பார் அசோசியேஷன் செயலாளர் பிரதீஸ் கூட்டலிடுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது கணேசன் பிரதீஸை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த செயலாளர் கலையரசன் கணேசனிடம் கேட்ட போது அவரையும் தாக்கி தள்ளி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அங்கிருந்த வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களைத் தாக்கிய கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...