கோவையில் தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை - குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு..!

மது போதையில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணனுக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் தம்பியை கொன்ற அண்ணணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 ஆயிரம் அபராதம் விதித்து, கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தனியாக வசித்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி ஹைதராபாத்தில் வேலை வந்த நிலையில் கடந்த 2021-ல் கோவை வந்துள்ளார்.

இருவரும் உக்கடம் புல்லுக்காடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இரவு மது போதையில் வந்த செல்வராஜ் மற்றும் சுப்பிரமணி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணி செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...