நகர்நல மருத்துவமனைகளில் கனிவான, தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகரில் உள்ள 32 நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் மகப்பேறு பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 32 நகர்நல மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழுவினருக்கு, மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.



இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகரில் உள்ள 32 நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் மகப்பேறு பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்: கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 இடங்களில் நகர் நல மருத்துவமனைகள் செயல்பட்டுவருகிறது. தற்போது, பருவ மழை பெய்து வருவதால் ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்து மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் அரசு சேவை மனப்பான்மையுடன் வழங்கி வருகிறது. எனவே, இதன் முக்கியத்துத்தை உணர்ந்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சையை வழங்க வேண்டும்.

கடந்த 4 மாதங்களில் ராஜ வீதி மருத்துவமனையில் 43 தாய்மார்கள் பிரசவித்துள்ளனர், தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். இம்மருத்துவமனையில், தாய்மார்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று மற்ற மருத்துவமனைகளும் மகப்பேறு சேவையை ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பெறும் வகையில், மருத்துவ குழுவினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நகர்நல மருத்துமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவிகள் முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நகர் நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும். மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு பணியாற்றிட கேட்டுக் கொள்கிறேன், என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார். உதவி நகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...