ரூ.25-கோடி சொத்தை அபகரிக்க முயற்சி - தந்தை மீது மகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!

திருப்பூரில் தனக்கு பாத்தியப்பட்ட 25-கோடி மதிப்புள்ள சொத்தை தந்தையே தனது கையெழுத்து இல்லாமல் கிரயம் செய்து கொடுத்ததாக மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


திருப்பூர்: ரூ.25-கோடி சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தந்தை மீது மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி தனது கையெழுத்து இல்லாமல் கடந்த 25-ஆம் தேதி கிரயம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்வது அறிந்த அன்றைய தினமே சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில், சார்பதிவாளர் ரத்து செய்வதாக அறிவித்து இருந்ததாகவும், ஆனால் நேற்று மாலை வரை காத்திருந்து ஆவணங்களை ரத்து செய்யாமல் சார்பதிவாளர் பூபதி தங்களை ஒருமையில் பேசி அனுப்பியதாகவும், எனவே தனது கையெழுத்து இல்லாமல் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை தனது தந்தை ஏமாற்றி கிரயம் செய்திருப்பதை ரத்து செய்து வேறு யாரும் அதனை கிரயம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...