கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டச் செயலாளர்கள் தண்டபாணி, சிங்கை சந்துரு, தினகரன், சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இதில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



இதில், அதிமுக ஆட்சிக்கு வரும் முன் ஒன்று கூறியதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது என்றும் மத்திய அரசு கேஸ் விலை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் GST வரி உயர்த்தியதாகவும் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்திற்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில், சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...