ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் மாட்டி சிறுத்தை பலி

வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் பக்கம் வந்து செல்கின்றன. இந்நிலையில் அப்படி வந்த சிறுத்தை மற்றும் மான் சுருக்கு கம்பியில் மாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரகத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது.

இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர். இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...