மாணவர்கள் விளையாட்டு துறையிலுள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர 'பேட்ரி டெஸ்ட்' திட்டம் அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டுத் துறைகளின் மீது கவனத்தைச் செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.


திருப்பூர்: 6, 7, 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர பேட்ரி டெஸ்ட் என்ற திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாகப் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

முதலாவதாகத் திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், பேசிய அன்பில் மகேஷ், 6, 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்றவர், விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் உள்ளதாக கூறினார்.



பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்த பிறகு, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.



ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், மாணவ-மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.



மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் செயலி பற்றி அமைச்சர் கூறினார்.

கனியாமூர் நிகழ்வுக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

குழந்தைகள் முழுமையாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதிலிருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2-மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...