கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் ..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறியதை கண்டித்தும், பொய் வழக்கு போடுவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதாக கூறி கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



நேருவால்தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு வழங்கப்பட்ட கடனில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தற்பொழுது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அவ்வப்போது ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறுவதை கண்டித்தும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடுவதாகவும் கூறி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணியினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...