கோவை பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு தொடுத்து மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டு சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்கும் செயலை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.



மாவட்டத் தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாடு முழுவதும் இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிந்து கொண்ட மத்திய அரசு நெருக்கடியை கொடுப்பதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மீது அமலாக்கத்துறை ஏவி வழக்குத் தொடுத்து, அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.



இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...