திருப்பூர் அருகே 'டவர் லைன்' அமைப்பதற்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு..!

டவர் லைன் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி குன்னத்தூர் உட்பட்ட, ஹை ஸ்கூல் ரோடு ஆகிய பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே டவர் லைன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் உட்பட்ட, ஹை ஸ்கூல் ரோடு பகுதி ஆகிய மூன்று வார்டுகளிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றன. இதனிடையே, இக்குடியிருப்பு பகுதியின் அருகில் தனியார் நிறுவனமானது 'டவர் லைன்' அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



எனவே, இப்பகுதியில் அமைந்துள்ள 500-குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டும், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டும், டவர் லைன் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...