திருப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்..!

கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்க காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் நெசவாளர் காலனியில் வசித்து வரும் நெசவாளர்களுக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு மடத்துக்குளம் தாலுக்கா தாந்தோணி கிராமத்தில் உள்ள நிலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரசு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்களிப்புத் தொகையுடன் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வந்த சூழ்நிலையில் மேற்படி இடத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு முடிவுற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.



ஆனால், காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சியரின் அறிவிப்பையும் மீறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...