கோவை - சேலம் 'மெமு' பாசஞ்சர் ரயில் இயக்கம் இன்று முதல் சீராவதால் நான்கு மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி..!

இனி, 35 ரூபாய் கட்டணத்தில் கோவையில் இருந்து சேலத்துக்கும், 25 ரூபாய் கட்டணத்தில் திருப்பூரில் இருந்து சேலத்துக்கும் பயணிக்கலாம். இதனால், நான்கு மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை - சேலம் 'மெமு' பாசஞ்சர் ரயில் இயக்கம் இன்று முதல் சீராவதால் நான்கு மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட கோவை - சேலம் மெமு பாசஞ்சர்(06802) ரயில் இயக்கம், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், கடந்த 11-ம் தேதி தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் ரயில் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், மறு நாளான, 12ம் தேதி முதல் காவேரி-ஆனங்கூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடந்ததால், நேற்று வரை கோவையில் இருந்து ஈரோடு வரை மட்டும் ரயில் இயக்கப்பட்டது.

பணிகள் முடிந்து இன்று முதல் ரயில் இயக்கம் சீராகிறது.

இனி, 35 ரூபாய் கட்டணத்தில் கோவையில் இருந்து சேலத்துக்கும், 25 ரூபாய் கட்டணத்தில் திருப்பூரில் இருந்து சேலத்துக்கும் பயணிக்கலாம். இதனால், நான்கு மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...