களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி... மக்கள் உற்சாக வரவேற்பு..!

கோவைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்கும் வகையில் பாரம்பரிய கலைகள் மூலம் வரவேற்றனர்.


கோவை: செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளிக்க உள்ளனர்.



இந்நிலையில், அந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இதில், பல்வேறு மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் அதற்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.

இந்த ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் துவங்கி அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைகிறது. அதன் பின் இந்த ஜோதியை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் வழங்க உள்ளனர்.



இந்த ஜோதி ஓட்டத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்கும் வகையில் பாரம்பரிய கலைகள், இசை முழக்கங்கள் முழங்க எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உட்பட கோவை மேயர், துணை மேயர் செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...