வருமானவரிதுறையினர், தொழில்துறையினரின் பிரச்சனைகளை மத்திய அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும் - முன்னாள் நீதியரசர் சதாசிவம்

கோவையில் இன்று 162-வது வருமான வரி தினவிழா கடைபிடிக்கப்பட்டது. விழாவிற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அதிக வருமான வரி செலுத்திய தொழில் நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டனர்.



கோவை: "அரசுக்கு வரி செலுத்தினால், நாளை அதை பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு நமக்கு திரும்ப வழங்கும். இதை வரி செலுத்தும் அனைவரும் புரிந்து கொள்ளுதல் அவசியம்" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம்.



நாடு முழுவதும் தேசிய வருமான வரி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன், ஜூன் 24, 1860 அன்று தான் முதன் முதலில் வருமான வரி செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

வருமான வரி செலுத்தும் முறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதி தேசிய வருமானவரி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, கோவையில் இன்று 162-வது வருமான வரி தினவிழா கடைபிடிக்கப்பட்டது. நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு, கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர், பூபால் ரெட்டி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் நீதியரசர் சதாசிவம் பேசுகையில்: "அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முக்கிய பணியை மேற்கொண்டு வருவது வருமானவரித்துறை. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வருமானத்துறை மிக சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.



வருமானவரித்துறை அதிகாரிகள் வரியை வசூலிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், தொழில்துறையினர் -- குறிப்பாக சிறு, குறு, நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் துறையினர் வரி செலுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

'கொரோனா' நோய் தொற்று பரவல் காரணமாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தொழில்முனைவோரை பாதுகாக்க அவர்கள் செலுத்தும் வருமான வரியிலிருந்து, ஒரு சிறிய தொகையை 'கார்பஸ் பண்டு' (Corpus Fund) போன்று உருவாக்கி, அதன் மூலம் பேரிடர் போன்ற அவசர காலங்களில் தொழில் துறையினருக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வருமான வரி தினத்தன்று நாட்டில் வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும். நேர்மையாக ஒவ்வொருவரும் செலுத்திய வரி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இன்று, அரசுக்கு வரி செலுத்தினால், நாளை அதை பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு நமக்கு திரும்ப வழங்கும். இதை வரி செலுத்தும் அனைவரும் புரிந்து கொள்ளுதல் அவசியம்,", இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக, கோவை வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிக வருமான வரி செலுத்திய கே.பி. ஆர் குழும உரிமையாளர் நடராஜ், எமரால்டு குழுமம் உரிமையாளர் சீனிவாசன், சாந்தி பீட்ஸ் நிறுவன உரிமையாளர் லட்சுமணன், ஜெம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர், டாக்டர். பழனிவேலு, ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் நாச்சிமுத்து சந்திரன், பல்லவா குழுமம், அம்பிகா காட்டன் மில்ஸ், எல்.ஜி., குழும நிறுவனங்கள், சக்தி சுகர் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஜி.கே. என்.எம்., மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜவேலு உள்ளிட்ட பலர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...