செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார்

மகாபலிபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு கோவையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார்.


கோவை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாளை கோவை மாவட்டத்திற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது.

கொடிசியா வளாகத்தில் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினர்களிடம் அமைச்சர்கள் ஒப்படைக்க உள்ளனர்.



இந்நிலையில் அந்த ஜோதியை வரவேற்கும் விதமாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் வெல்கம் டூ கோயம்புத்தூர் என்ற ஹீலியம் பலூனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பறக்க விட்டார்.



இந்நிகழ்வில் பல்வேறு குழந்தைகள், இளைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர் அவர்களுடன் சேர்ந்து கருப்பு வெள்ளை நிறத்திலான பலூன்களை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பொது மக்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...