கோவையில் நமக்காக நம் எம்எல்ஏ நலம் இலவச மருத்துவ முகாம்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நமக்காக நம் எம்எல்ஏ திட்டத்தில் நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMCஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



தொடர்ச்சியாக இன்று கோவை 80 அடி சாலை, ராமநாதபுரம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனைகளான சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை உட்பட பல்வேறு மருத்துவங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



இதில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.



இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்பது குறித்தும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...